Hindu Tamil Thisai
தேனி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (நவ.6) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது…