உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சமையலறையில் பொருட்களைத் தேடியே நேரம் போகுதா? இந்த 12 மாற்றங்களைச் செய்து பாருங்க

சமையலறை என்பது வீட்டில் அதிக நேரம் செலவிடும் இடங்களில் ஒன்று. தினமும் சமைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, மளிகைப் பொருட்களை எடுத்து வைப்பது எனப் பல வேலைகள் இங்கு நடைபெறுகின்றன. இதனால் சில நாட்களிலேயே சமையலறையில் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கத் தொடங்கிவிடும். குறிப்பாக, சிறிய சமையலறை கொண்ட வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பது சவாலாக இருக்கும். தேவையான பொருளைத் தேடுவதற்கே சில நேரங்களில் அதிக நேரம் செலவாகும். ஆனால், சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் சமையலறையை எப்போதும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும், பொருட்களை எளிதில் எடுத்துப் பயன்படுத்தும் வகையிலும் வைத்தி…