உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'7 ஆம் எண் ஜெர்சியை ஒப்படைக்கிறேன்'- கண்ணீருடன் ஓய்வை அறிவித்த ரொனால்டோ

உலகக் கால்பந்து வரலாற்றில் தனது அசாத்திய ஆட்டத்தாலும், அடுக்கடுக்கான சாதனைகளாலும் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையே தன்வசப்படுத்தி வைத்திருந்த போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தற்பொழுது தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஐந்து முறை உலகின் மிக உயரிய பலோன் டிஆர் விருதை வென்று கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்த நாற்பத்தோரு வயது கால்பந்து ஐகான், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு உருக்கமான வீடியோ பதிவின் மூலம் இந்த அதிர்ச்சி முடிவை உலகிற்குப் பகிர்ந்து கொண்டுள்ளார். போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக கட…