Indian Express Tamil
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகச் சென்னை மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்து மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் எந்த இடையூறும் இன்றி தங்களின் பயணங்களை மேற்கொள்ள முடியும். முக்கிய நேர மாற்றங்கள் மற்றும் விபரங்கள்: இன்று (நவம்பர் 5): வழக்கமாக இயக்கப்படும் நேரத்திற்குப் பதிலாக, இன்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை (நவம்பர் 6): பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு, நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நெரிசல் நேரச் சேவைகள் இயக்கப்படும். வழித்தட வாரியான கடைசி ரயில் நேரம்: பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் க…