Indian Express Tamil
தமிழக பொதுத் துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்; 20% தீபாவளி போனஸ் அறிவித்த விஜய்
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; தொழிலாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, திறன்மைக்க மனிதவளம் மற்றும் அரசின் தொலைநோக்குக் கொள்கைகள் ஆகியவை மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. உற்பத்தி, வாகனங்கள், பொறியியல், ஜவுளி, தோல் பொருட்கள், மருந்துகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேற…