உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“கரூர் என்றாலே அனைத்திற்கும் ஃபேமஸ்தான் போல” - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 3,000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அதில் 150 ஏக்கர் நிலம் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள…