Daily Thanthi
'வெற்றி வீடு கட்டும் திட்டம்': முதற்கட்டமாக 70 ஆயிரம் வீடுகள் கட்ட ஒப்புதல்
சென்னை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு 5 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 2026-27-ம் நிதியாண்டில் 70,000 வீடுகள் கட்ட ‘வெற்றி வீடு திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ்…