Polimer News
வெற்றி வீடு கட்டும் திட்டம் - ரூ.3,500 கோடி ஒதுக்கீடு..!
வெற்றி வீடு கட்டும் திட்டத்தில் முதற்கட்டமாக 70 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மரம், மூங்கில், மண், இலை, புல், கூரை போன்ற நிலையற்ற பொருட்களால் கட்டப்பட்ட கூரை வீடுகள், சிமெண்ட் ஷீட் சுவர் கொண்ட வீடுகள், தகரம், பனை ஓலை, தார்பாய், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வேய்ந்த வீடுகளில் வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு வீட்டுக்கு அதிகபட்ச மானியமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் வீட்டின் பரப்பளவு சமையலறை உட்பட குறைந்தபட்சம் 360 சதுர அடியாகவும், அதிகபட்சம் 500 சதுர அடியாகவும் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டை சற்று பெரிதாகக…