Polimer News
“முரசு புயல்” கடலில் உக்கிரம் படகு பழுதாகி தவித்த காசிமேடு மீனவர்கள் 7 பேர் பலி..! உறவினர்கள் ஆவேச போராட்டம்
கடந்த மாதம் 29 ந்தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், அது ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் என்பதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று காலை 9.50 மணிக்கு எச்சரித்து இருந்தனர். இந்த தகவல் கிடைப்பதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு சென்னை காசிமேடு மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து 4 விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை பக்கிரிசாமி என்கிற சூர்யா இயக்கி உள்ளார், அந்த படகில் குப்பன் (49), முருகன் (48), மோகன் (47), ராஜேஷ் (52) குப்புசாமி (58) நாராயணன்(57), அரவிந்த் (40), விஜயகாந்த்(44) உள்ளிட்…