Nakkheeran
“பெரியார் அறிவுலகத்தில் மிகப்பெரிய ஊழல்...வெட்கமாக இல்லையா?” - அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு!
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த மையத்தில் லட்சக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட அதிநவீன நூலகம், டிஜிட்டல் நூலகம், குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகப் பிரிவு மற்றும் அதிநவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கடந்த திமுக ஆட்சியின் போது சுமார் 1.98 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் கட்டப்பட்டு, இப்பணிகள் முழுமையடையாத சூழலில், தவெக தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மீதமுள…