IBC Tamil
கிரிஷ் வழக்கு : ஜானகி சிறிவர்தனவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி வரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது. கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக ஜானகி சிறிவர்தன இன்று காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ...