உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பிளிப்கார்ட்டில் ஐபோன் 17 ஆஃபர் மழை: ரூ.60,000-க்கும் குறைவான விலையில் வாங்குவது எப்படி?

புதிதாக ஐபோன் 17 வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் அதன் ரூ.1 லட்சம் என்ற அதிகபட்ச விலை உங்களை யோசிக்க வைக்கிறதா? உங்களுக்காக ஒரு அருமையான செய்தி வெளியாகியுள்ளது. பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட், அப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் 17 மாடலை ரூ.60,000-க்கும் குறைவான விலையில் வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், இந்த சலுகையைப் பெறுவதற்கு சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன. இந்தியாவில் ஐபோன் 17 (256GB, வெள்ளை நிறம்) மாடலின் அதிகாரப்பூர்வ விற்பனை விலை ரூ.99,900 ஆக உள்ளது. தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நேரடியாக 3 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட்டு, அதன் விலை ரூ.97,300 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது…