IBC Tamil
யாழில் காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 29ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.