Nakkheeran
“தவெக எம்.எல்.ஏ ஒன்னும் யோக்கியன் கிடையாது” - செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி!
சில தினங்களுக்கு முன்பு, மதுரை மத்திய தொகுதியின் தவெக எம்.எல்.ஏ மதார் பதூருதின் முஸ்தபா அதிமுகவும், திமுகவும் மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது மதுரையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக முதலில் ரூ.15 கோடியும், அதன் பின் ரூ.15 கோடியும் கொடுப்பதாக தன்னிடம் பேரம் நடத்தியதாக எம்.எல்.ஏ முஸ்தபா குற்றச்சாட்டினார். இந்த புகார் தொடர்பாக அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன் என்பவரிடம் மதுரை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் ரூ.15 கோடி வரை அதிமுக நிர்வாகி பேரம் பே…