உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சூர்யா படத்தை 3 முறை நிராகரித்தேனா? - நஸ்ரியா விளக்கம்

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சீன்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியா திரும்புகிறார். நஸ்ரியாவுடன் நடிப்பது குறித்து சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, மூன்று முறை நஸ்ரியா தனது படத்தை நிராகரித்ததாக பேசினார். அவர் பேசியதாவது, “நான் எப்போதும் நஸ்ரியாவுடன் நடிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். இதற்கு முன்பும் எனது மூன்று படங்களில் நடிக்க அவரிடம் கேட்டோம். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இப்போது நான்காவது முறையாக இப்படத்திற்கு கேட்ட போத…