Indian Express Tamil
100 ரூபாய் நோட்டை வைத்து ஃபிரிட்ஜைச் சோதிக்கலாம்; மின்சாரச் செலவை மிச்சப்படுத்தும் எளிய வழி
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருளாக குளிர்சாதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்) இருந்து வருகிறது. காய்கறிகள், பழங்கள், பால், தயிர், சமைத்த உணவுகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்க ஃபிரிட்ஜ் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக கோடை காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் இதன் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. ஆனால், பலரும் ஃபிரிட்ஜை பயன்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை அதன் முறையான பராமரிப்பில் காட்டுவதில்லை. இதனால் சாதனத்தின் செயல்திறன் குறைவதுடன், தேவையற்ற மின்சாரச் செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஃபிரிட்ஜின் கதவு சரியாக மூடப்படாமல் இர…