Indian Express Tamil
எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மரணம்; குமரி வட்டார வழக்கில் எள்ளல் தொனியில் எழுதியவர்
கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை மற்றும் பகடி எழுத்தாளர் பிரபு தர்மராஜ் வியாழக்கிழமை (நவம்பர் 5) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 42 வயதான பிரபு தர்மராஜின் மரணம் எழுத்தாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுகுடியிருப்பைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பிரபு தர்மராஜ். பதினெண் மேற்கணக்கு காதைகள், அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான், கசவாளி காவியம், ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும், கோலப்பனின் அடவுகள், சக்ரவர்த்தி திரையரங்கம், மில்லரின் மின்கம்பம், ராணி இல்லம், களிறும் பிடியும் பின்னே நானும், ச்சூ காக்கா, ஜாப் மார்சியா உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுத…