Indian Express Tamil
குக்கருக்குள் ஒரு சின்ன ஸ்டீல் கிண்ணம்... சாதம் பொங்குவதைத் தடுக்குமா? இதோ சிம்பிள் டிப்ஸ்!
சமையலறையில் தினமும் சமையல் செய்பவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று குக்கரில் சாதம் வைக்கும்போது தண்ணீரும் அரிசியும் சேர்ந்து பொங்கி வழிவதுதான். குறிப்பாக, காலையில் அவசரமாகச் சமையல் செய்யும்போது குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறி அடுப்பு, சமையல் மேடை என அனைத்துப் பகுதிகளையும் அசுத்தமாக்கிவிடும். இதனால் சாதம் சமைப்பதுடன் சேர்த்து அடுப்பைச் சுத்தம் செய்வதற்கும் கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருக்கும். சில நேரங்களில் குக்கரின் விசில் பகுதியிலும் அரிசித் துகள்கள் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், சில எளிய சமையலறை வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சினையைக் கணிசமாகக் குறைக்க…