உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு; 'நஞ்சூட்டும் செயலுக்கு ஒப்பானது': அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நூலகத்துக்கு முன்னாள் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகம் என்று பெயர் சூட்டினார். அப்போது பணிகள் நிறைவு பெறாததால் நூலகம் திறக்கப்படவில்லை. இதனையடுத்து பணிகள் முடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் இந்த அறிவுலகத்தை கடந்த 16 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில், பெரியார் அறிவுலக நூலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்வதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார். இவர் நூலகங்களுக்கு நூல் தேர்வு செய்யும் குழுவில் இட…