உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அகில இந்திய மருத்துவ கவுன்சலிங் 5-ம் சுற்று ரிசல்ட்; தமிழகத்தில் மட்டும் 283 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலி

அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு காலியிடச் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் படிப்பில் இன்னும் காலியிடங்கள் உள்ளன. நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அகில இந்திய கலந்தாய்வின் முதல் நான்கு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்து, தற்போது சிறப்பு காலியிடச் சுற்று எனப்படும் 5 ஆம் சுற்றுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தனியா…