Nakkheeran
’முதலையால் கிடைத்த மறுவாழ்வு’; இரவில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
தற்கொலை எண்ணத்துடன் ஆற்றில் குதித்த பெண், ஒரு முதலையிடம் இருந்து தற்காத்துக்கொள்ளப் போராடியதன் விளைவாகத் தற்கொலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேகா (38). இவர், தனது குடும்ப தகராறு காரணமாகத் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி, கடந்த புதன்கிழமை இரவு தட்சிண கன்னடா மாவட்டத்தின் குக்கே சுப்பிரமண்யா பகுதியில் உள்ள குமாரதாரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். அவர் ஆற்று நீரில் விழுந்த சில நிமிடங்களில், அங்கிருந்த ஒரு முதலை திடீரென அவரது உடலின் பாகங்களைக் கடித்துத் தாக்கியது. தனது, அருகில் முதலை இருப்பதைக் கண்ட ரேகா அதிர்ந்து போனார். ப…