Nakkheeran
'இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் மேயர்'; அமெரிக்காவில் சாதனை படைத்த தமிழ் பெண்
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். அதன்படி, லாஸ் ஏஞ்சல்ஸின் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகியுள்ளார். இவர், தற்போதைய மேயராக இருக்கும் கரேன் பாஸை தோற்கடித்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்தத் தேர்தலில், நித்யா ராமன் சுமார் 52% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த இருபது ஆண்டுகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பதவியில் இருக்கும் ஒரு மேயரைத் தோற்கடித்து, மற்றொருவர் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்று க…