Indian Express Tamil
அமெரிக்காவை அதிர வைத்த தமிழ்நாட்டு மருமகள்: பதவியில் இருந்தவரையே தேர்தலில் வீழ்த்தி வரலாறு படைத்த நித்யா ராமன்
Shiny Varghese கடந்த மாதம், லாஸ் ஏஞ்சலஸ் நகர வரலாற்றிலேயே முன் எப்போதும் நடந்திராத ஒரு சாதனையை நித்யா ராமன் நிகழ்த்திக் காட்டினார். லாஸ் ஏஞ்சலஸ் கவுன்சில் தேர்தலில், பதவியில் இருந்த கவுன்சில் உறுப்பினரைத் தோற்கடித்து வெற்றி பெற்ற முதல் நபர் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றார். நகர்ப்புற திட்டமிடல் (Urban Planning) மற்றும் நிர்வாகத்தில் பயிற்சி பெற்ற 39 வயதான நித்யா ராமன், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சமூக சேவகராக தீவிரமாக இயங்கி வந்தவர். திருச்சூரில் பிறந்து, தமது ஆறாவது வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தார். பின்னர், இந்தியாவில் சென்னையில் வசித்து (இவரது கணவரின் குடும்பம் மத…