Nakkheeran
போதையில் தமிழ்நாடு தள்ளாட்டம்! - நாசமாய்ப்போன யூத்!
கடலூர் மாவட்டம் மேற்குப் பகுதியில் உள்ளது பெண்ணாடம் காவல் நிலையம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலை வில் அரியலூர் மாவட்ட தளவாய் காவல் நிலை யம். இப்பகுதி குற்றச்செயல்களின் இருப்பிட மாக மாறிவருகிறது. இப்பகுதியில் கஞ்சா போதை மாத்திரை நடமாட்டம் மிக அதிகள வில் உள்ளது. போதைக்கு அடிமையாகிய இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிகிறார்கள். காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பெண்ணாடம் அருகிலுள்ள கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் மகன் உதயராஜா. இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியர் முடித்துவிட்டு கட்டடப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்த…