Nakkheeran
டி.என்.பி.எஸ்.சி.க்கான வயது வரம்பு உயர்வு: சலுகையா- தந்திரமா?
தமிழ்நாட்டில் அரசுப் பணி தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை கணக்கில் கொண்டு, தமிழ்நாடு அரசு, டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகளுக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. லட்சக்கணக்கில் செலவிட்டு படித்து விட்டு, வயது வரம்பு முடிந்துவிட்டதால் தேர் வெழுத முடியாமல் தவித்த இளைஞர்களுக்கு இது ஒரு தற்காலிக நிவாரணமாகப் பார்க்கப்பட்டாலும், இதற்குப் பின்னாலுள்ள அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளை ஆராயும்போது பல ஆழமான கேள்விகள் எழுகின்றன. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் டி.என். பி.எஸ்.சி. குரூப்…