Nakkheeran
நஷ்டம்! தினசரி 20 கோடி -சீரழியும் போக்குவரத்துத் துறை !
தமிழக வெற்றிப் பயணத்தால் அரசு போக்குவரத்து கழகங்கள் நட்டத்தை சந்திக்க துவங்கியுள்ளன. இது போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பயத்தையும், கவலை யையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி என மொத்தம் 6 போக்குவரத்து மண்டலங்கள், மாநில விரைவு போக்குவரத்து கழகம், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் என 8 பிரிவுகள் உள்ளன. தினசரி 19,283 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் சராசரியாக 1 கோடி பயணிகள் பயணம் செய்துவருகின்றனர். இதன்மூலம் சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் வந்துகொண்டிருந்தது. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விடியல் பயணம் என்கிற பெயரில் மாநகர, நகர மற்றும் க…