Nakkheeran
ஆவினுக்கு பாலூற்றப்படுகிறதா?சந்தேகத்தில் தமிழக மக்கள்!
தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியா வசியத் தேவைகளில் ஒன்றாக விளங்கும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு சமீபகாலமாக நிலவிவரும் கடுமையான தட்டுப்பாடு பொதுமக்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் பூத்துகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு “"பால் இல்லை'’என்ற பலகைகளே மிஞ்சுகின்றன. போதுமான அளவு சப்ளை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டாலும், தட்டுப்பாடு தொடர்வதாலும், தனியார் பால் விலையேற்றத்தாலும் நடுத்தர மக்கள் கடும் பொருளாதாரச் சுமைக்கு ஆளாகியுள்ளனர். இந்தச் சூழலில், ஆவின் தட்டுப்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி குறித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அரசுத்…