உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

டூரிங் டாக்கீஸ்!

போலி கணக்கு! "இறுதிச்சுற்று' படம் மூலமாக அறிமுகமானவர் கிக் பாக்ஸிங் வீரரான ரித்திகா சிங். அதன் பிறகு "ஆண்டவன் கட்டளை', "சிவலிங்கா', "ஓ மை கடவுளே' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இவரின் பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு ஒன்றினை உருவாக்கி சப்ஸ்கிரிப்ஷன் மூலமாக பணம் பறித்து வந்திருக்கிறார்கள். இது பற்றி ரித்திகா சிங் கூறுகையில் "ஆரம்பத்தில் இதை நான் பெரிதுபடுத்த வேண்டாம் என்று நினைத்தேன். தானாகவே இது நின்றுவிடும் என்றும் கருதினேன். ஆனால் இது நிற்கவில்லை. எனது அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தி என்னை அவமதிக்கும் அளவுக்கு காரியங்கள் சென்றுவிட்டன. நான் தவறு எதுவும் செய்யாத நிலையில், என் பெயரைக் காப்…