Hindu Tamil Thisai
‘தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது’ - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
கடலூர்: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விருத்தாசலம் தொகுதி கொட்டாரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிரேமலதா எம்எல்ஏ ஆய்வு செய்தார். ஆசிரியர்கள், மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுடன் மத்தாப்பு கொளுத்தி தீபாவளியை கொண்டாடினார்…