உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

13 ஆண்டுகால பயணம்... தொடங்கிய நாளிலே நிறைவு செய்த ஷமி; டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 13 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை அவர் நிறைவு செய்துள்ளார். 36 வயதான முகமது ஷமி, டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கிய அதேநாளான, நவம்பர் 6-ல் தனது ஓய்வு முடிவை அறிவித்து இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்பதையும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். பதிவு இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஷமி, “வெள்ளை நிற ஜெர்சிக்கு விடை கொடுக்கிறேன். ஆனால், அதனுடன் தொடர்புடைய நினைவ…