Nakkheeran
கமல்ஹாசனின் புதிய பட அப்டேட்; மீண்டும் சூட்டப்பட்ட அதே தலைப்பு?
'தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து, ‘சித்தா’ பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் நடிக்க, கமல்ஹாசன் கமிட்டாகியுள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. அப்போது, படத்தின் லுக் டெஸ்டும் வெளியிடப்பட்டது. பெயரிடப்படாத இந்த படத்தை, கமலின் ’ராஜ் கமல்’ மற்றும் ’டர்மெரிக் மீடியா’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதையடுத்து, இப்படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. எனினும், இடையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சுமார் 15 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று (07-11-2…