உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”தியேட்டருக்கு எஸ்... மாநில உரிமைக்கு நோ...”; தவெக அரசைக் கண்டித்த மு.க.ஸ்டாலின்

மத்திய-மாநில உறவுகள் குழுவைத் தமிழக கலைத்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை நேற்று வெளியானது. தமிழக அரசின் கூற்றுப்படி, தமிழக மாநில சட்ட ஆணையம் மற்றும் மத்திய மாநில உயர்நிலைக் குழுவின் செயல்பாடுகள் மற்றும் நோக்கம் ஒத்ததன்மையுடைதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போது, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, மத்திய மாநில உறவுகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறு ஆய்வு செய்யவும், கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டதாக அப்போதைய திமுக அரசு தெரிவித்திர…