Dinamani
தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும்: எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து!
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச்செயல் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி: தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால்…