உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

விலையில்லா பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றத் தலைமை ஆசிரியை..!

திருச்சி மாவட்டம், தும்பலம் அரசு ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவசப் பாடப்புத்தகங்களை தலைமை ஆசிரியை மஞ்சுளா எடைக்குப் போட்டு விற்றதாகப் புகார் எழுந்துள்ளது. முதலாம் பருவத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்களிடமிருந்து பழைய புத்தகங்களை திரும்பப் பெற்ற மஞ்சுளா, பழைய பேப்பர் வியாபாரியை பள்ளிக்கே வரவழைத்து அவற்றை எடைக்குப் போட்டதாக கூறப்படுகிறது. அவ்வழியாகச் சென்றவர்கள் இது குறித்து கேட்டபோது, பள்ளியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள புத்தகங்களால் டெங்கு கொசுக்கள் பரவாமல் இருக்க அவற்றை விற்றதாக வினோதமாக விளக்கமளித்துள்ளார். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்போவதா…