உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானமா? என்னவாகும் நகர்வுகள்?'-ரகசியம் உடைக்கும் பத்திரிகையாளர் சிவப்பிரியன்

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடையவுள்ள சூழலில், அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு தப்பித்த தவெக அரசுக்கு, வரும் நவம்பர் 13ஆம் தேதியுடன் அந்த ஆறு மாத கால அவகாசம் முடிவுக்கு வருகிறது. இந்த டெட்லைனைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒருமுறை சட்டசபையில் தவெக அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அரசியல் நகர்வுகள் மற்றும் அதன் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான விவாதங்கள் எழுந்துள்…