Dinamani
செஞ்சி அருகே சோகம்: நாற்று எடுத்த போது இடி பாய்ந்து ஆய்வக உதவியாளர் உள்பட 2 பேர் பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சொரத்தூர் கிராமத்தில் வயலில் நாற்று எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆய்வக உதவியாளர் உள்பட இரண்டு பேர் இடி பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அய்யனார்(36). இவர் தையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார்…