Daily Thanthi
நீலகிரி: கெத்தை மலைப்பாதையில் 3 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி, நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் கெத்தை மலைப்பாதையில் இன்று காலை 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் மண் சரிவு நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் தொடர் மழையால், மஞ்சூர் - கெத்தை - முள்ளி வழியாக கோவை செல்லும் மலைப்பாதையில் இன்று காலை அடுத்தடுத்து 3 இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. போக்குவரத்து முழுமையாக துண்டிப்பு…