Indian Express Tamil
தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி: காலையிலேயே இட்லிக்கு ஏற்ற மட்டன் சுக்கா
தீபாவளி திருநாளில் காலையில் சுடச்சுட இட்லியுடன் பரிமாற ஒரு அருமையான மற்றும் காரசாரமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? மணக்க மணக்க வறுத்து அரைத்த மசாலாவுடன் தயார் செய்யப்படும் இந்த மட்டன் சுக்கா ரெசிபி, உங்கள் தீபாவளி காலை விருந்துக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். வீட்டில் உள்ள அனைவரையும் அசத்தக்கூடிய இந்த சுவையான மட்டன் சுக்காவை எளிமையாக எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு தண்ணீர் - மட்டன் மூழ்கும் அளவு மல்லி (தனியா) - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1/2 டேபிள…