உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

Jumping from High Places: பதற்றங்களைப் போக்கும் ‘பாயும் ஒளி’ சோலே | திரை தேவதைகள் 43

எல்லாவற்றையும் ஒரே மூச்சில் செய்துவிட வேண்டுமென்று தவிக்கும் போதுதான் பதற்றம் ஏற்படும். ஒரு நாளை ஒரு நாளாய் வாழ்ந்து விட்டால், நம்மையும் நாளையையும் காலம் பார்த்துக் கொள்ளும். எங்கேயோ, எப்போது ஒரு சுய முன்னேற்றப் புத்தகத்தில் வாசித்த கருத்தின் சாராம்சம் இது. நம் பிறப்பையும், இறப்பையும் தீர்மானிப்பவர்கள் நாம் இல்லை. ஆனாலும் நம் வாழ்க்கைப் பயணத்தில் அத்தனை அத்தனை இலக்குகளை தீர்மானித்து, அதை இந்த வயதில், இந்த வகையில், இந்த வழியில் செய்துவிட…