உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கொச்சி பென்ஸ் கார் விபத்து வழக்கு: சிறுவர்களால் ஏற்படும் வாகன விபத்தின் பொறுப்பில் இருந்து பெற்றோர்கள் தப்பிக்கக் கூடாது

எழுத்து: சுபம் குமார் மொழியாக்கம்: எம். கோபால் ஒரு வீட்டில் உள்ள மிகவும் சாதாரணமான பொருட்களில் கார் சாவிகளும் ஒன்றாகும், மேலும் அவை பெரும்பாலும் அனைவரின் கைக்கு எட்டும் தூரத்திலேயே இருக்கும். ஆனால், பருவம் எய்தாத ஒரு சிறுவன் தனது குடும்பத்துக்குச் சொந்தமான காரை ஓட்டிச் சென்று ஒருவரைக் கொல்லும்போது, நியாயமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க முடிந்தாலும், அந்த குற்றத்தைப் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று நிரூபிப்பதன் மூலம் பெற்றோர்கள் குற்றப் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடிகிறது. மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 199A, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமலேயே அறியாமையை ஒரு தற்காப…