IBC Tamil
மாவீரர் தினத்துக்கு தயாராகும் இரணைப்பாலை மக்கள்: துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்
(சண்முகம் தவசீலன்) தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட உள்ளது. அந்த வகையிலே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உருவாக்கப்பட்ட இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்கு...