Daily Thanthi
இந்த ஆண்டில் 11-வது பட்டம்... கொரியா ஓபனில் ஆன் சே-யங் சாதனை
யோசு, கொரிய ஓபனில் பட்டம் வென்று ஆன் சே-யங் அசத்தியுள்ளார். சாம்பியன் தென்கொரியாவில் நடைபெற்ற கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், தென்கொரியாவின் ஆன் சே-யங், ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஆன் சே-யங் 21-12 என எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், அடுத்த செட்டில் சிறப்பாக விளையாடிய யமாகுச்சி 21-15 என வென்று பதிலடி கொடுத்தார்…