உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நாடு கடந்து வந்து இணைய வழியில் நிதி மோசடி:32 சீனப் பிரஜைகள் கைது

பாணந்துறை, நல்லூருவ பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து இணையம் ஊடாகப் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 32 சீனப் பிரஜைகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 23 கணினிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணைகள் முன்ன...