Nakkheeran
அதிகாலையில் ஆடிய ஜப்பான்:நிலநடுக்கத்தால் கலங்கிய மக்கள்!
இயற்கை சீற்றங்களுக்கும் நிலநடுக்கங்களுக்கும் பெயர் போன ஜப்பானில், மீண்டும் ஒருமுறை அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று அதிகாலை 1:04 மணியளவில் மத்திய ஜப்பான் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தூக்கத்தில் இருந்த மக்கள் வீடுகளும், அடுக்குமாடி கட்டடங்களும் உலுக்கப்பட்டதால் அலறியடித்துக்கொண்டு தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தத் திடீர் இயற்கை சீற்றத்தால் ஜப்பானின் பல்வேறு நகரங்களில் பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றிக்கொண்டது. ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த நிலநடுக்கமானது ரிக்டர்…