Nakkheeran
போஸ்டர் ஓடுவதில் தகராறு- மோதிக்கொண்ட பாஜக, வீத லீடர்ஸ் நிர்வாகிகள்
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே தீபாவளி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய வீத லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகி திருப்பதி என்பவரை நாகர்கோவில் பாஜக மண்டல தலைவரும் கவுன்சிலருமான சதீஸ் என்பவர் தாக்கியது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. பாதிக்கப்பட்ட வீத லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகி திருப்பதி குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒட்டப்பட்டிருந்த மாற்று அரசியல் கட்சியின் போஸ்டர்களைக் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகர்கோவில் பாஜக மண்டல தலைவரும் கவுன்சிலருமான சதீஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அந்த நிர்வாகியைத் தேடிச் சென்று வழிமறித்துள்ளனர். நடுரோட்டில் வைத்து, "எங்களது ப…