உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வெளிநாட்டிலிருந்து பெருமளவு ட்ரோன்களுடன் வந்திறங்கிய எதிரணி எம்.பி : சுங்கத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த39 ட்ரோன்கள் மற்றும் 16 ஒலிவாங்கிகள் இன்று காலை (08) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டன என்று சுங்கத்துறை ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவ தெரிவித்தார். இந்த ட்ரோன்கள் இறக்குமதி உரிமங்கள், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் கொண்டுவரப்பட்டதாக சுங்கத்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.