Nakkheeran
அவசரமாக அயோடின் மாத்திரைகள் விநியோகிக்கும் ஈரான்- 3வது உலகப்போர் அச்சமா?
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகப் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தற்போது உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான பாதுகாப்பு நடவடிக்கை அரங்கேறியுள்ளது. ஈரான் அரசு தனது நாட்டு மக்களுக்கு அவசர அவசரமாக பொட்டாசியம் அயோடின் மாத்திரைகளை விநியோகம் செய்யத் தொடங்கியிருப்பது, அணு ஆயுதப் போர் வெடிக்கப் போகிறதோ என்ற பீதியை உலக அளவில் கிளப்பியுள்ளது. சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, ஈரானின் அணுமின் நிலையங்கள் மற்றும் முக்கிய ராணுவ நிலைகள் அமைந்துள்ள பூஷெர் மாகாணத்தில் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் எந…