Indian Express Tamil
கமல்ஹாசனின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகுதான் படத்தின் பெயர் சண்டியர் என தெரிந்து கொண்டோம்: வி.சி.க விளக்கம்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) தலைவர் தொல். திருமாவளவன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வு குறித்து எழும் அவதூறுகளுக்கு வி.சி.க சார்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 7 அன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, வழக்கம்போல அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வி.சி.க தலைவர் திருமாவளவன் திட்டமிட்டிருந்தார். இதற்காக அன்றைய தினம் காலை வேளச்சேரியில் உள்ள வி.சி.க தலைவரின் இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடினர். காலை 10.30 மணியளவில் புறப்படத் தயாரானபோது, கமல்ஹாசனை எங்கு சந்திப்பது எ…