Vikatan
"புகார் கொடுத்தும் போலீஸ் நியாயமா நடந்துக்கல.!" - ஆடுகளை கொன்ற அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சித்தப்பா?
அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி – வருந்தும் சொந்த கிராம மக்கள் இப்படியொரு தலைப்பில் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி விகடன் தளத்தில் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தோம். அமைச்சர் ஜெகதீவரியின் சொந்த ஊரான பனைவிளையில் ஊர் மக்கள் பயன்படுத்தி வந்த கிணற்றை அமைச்சரது உறவினர்கள் ‘இனி அது ஊர்க் கிணறு இல்ல, எங்களோடது’ எனச் சொன்னது குறித்த செய்தி. விகடனில் செய்தி வெளியானதும் டிவி சேனல்கள் பல இந்தச் செய்தியை வெளியிட்டன…