Nakkheeran
'பாஜகவை உருவாக்கி வளர்த்தெடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது'-எல்.கே.அத்வானிக்கு அன்புமணி வாழ்த்து
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நூறுவயதை தொட்டிருக்கும் நிலையில் அவருக்கு பாமகவின் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், 'இந்திய அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத அத்தியாயத்திற்கு சொந்தக்காரரான பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான எல்.கே.அத்வானி அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி, அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவை உருவாக்கி வளர்த்தெடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது. இந்தியாவில் அதிக காலம் தொடர்ந்து உள்துறை அம…